Saturday, February 23, 2008

இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகான பசிக்கும் இப்போதே என்னால் பந்தி வைக்க முடியும். ஆனால், வாங்கிக்கொள்ளத் தான் வயிறுகள் இல்லை


அரசவைக் கவிஞராகிறார் வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து, அரசவைக் கவிஞராக தமிழக சட்டசபையை விரைவில் அலங்கரிக்க காத்திருக்கிறார்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இந்த அரசவைக் கவிஞர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது.
முதல் முறையாக புலவர் புலமைப் பித்தன் அரசவைப் பொறுப்பை ஏற்றார். இவரைத் தொடர்ந்து கவிஞர் முத்துலிங்கம் இந்த பொறுப்பில் இருந்தார்.
பின்னர் இதுவரை அப்பொறுப்பிற்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவை அப்பொறுப்பில் அமர்த்த முதல்வர் கருணாநிதி தற்போது ஆலோசித்து வருகிறார்.


கவிஞர் வைரமுத்து நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இது தவிர பல்வேறு கவிதை நூலகளை படைத்துள்ளார்.
இவரது படைப்பான ' கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.


திரைப்படங்களில் இவர் எழுதிய சிறந்த பாடல்களுக்காக ஐந்து முறை ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்

இந்தக் கவிப்பேரரசின் கவிதைக் கடலில் நான் சுவைத்த சில வரிகள்

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடி இருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை ...



'முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ'


ஊனத்தைக் கொச்சைப்படுத்தாமல் நம்பிக்கையூட்டுகிற ஒரு பாடல்:

'உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா!'


முள்ளும், கள்ளும் இருந்தாலும்
முதலில் கள்ளுண்டதால்
முள்ளின் வலி மறத்து போனது



எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாரிவரும் பயனம் முடிந்துவிடும்
மாறுவதைப் புறிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடி ந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே



ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்


(ஆயிரத்தில்)

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கட்டுத் தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வைத்துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்குக் கூலிவாங்கிக் கொடுப்பேன் உண்மைக்குக் காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்


(ஆயிரத்தில்)

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக



கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்


கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு


நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு


விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம்

-- துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம்
-- ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம்
-- சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள்
- -உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்


உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே
-- அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே
-- அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே
-- அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே
-- என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்


பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
- -என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே
-- என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே
- -என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே
-- என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்


இந்த பூக்கள் விற்பனைக்கல்ல" - கவிப்பேரரசின் ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு.

காதலித்துப் பார்...
வடுவும் வடிவாய்தெரியும்
வலியும் இனிதாய்உணரும்
காலம் அலைப்போல்கரையும்
தனிமை வெயில்போல்உரைக்கும்
காதலித்துப் பார்!


சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே



நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி


இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டது

Saturday, January 26, 2008

நீயும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா

தத்தித்திரிந்த பருவம் போதுமினி உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்கால் தடம் பதித்து மெதுவாய் நடைபழகு

வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் நீயும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா

அதனால் தான் சொல்கிறேன் விடிந்துகொண்டிருக்கும் இவ்வுலகிற்குள் முடிந்ததொன்றை அழகாய் இந்த பூமிக்காய் சித்தரித்துவிடு அது போதும்.